Thursday, 3 November 2011

துன்பகோணம்!

                              - வதூத் 

( கடந்த 2004 ஆம் வருடம் ஜூலை 16 தேதி நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கும்பகோணம் தீ விபத்தில் பலியான பச்சிளம் குழந்தைகளின் நினைவு நாளில் எழுதப்பட்ட ஒரு கறுப்புக்கவிதை )



"தீயினாற் சுட்ட புண் 
உள்ளாறும்"...
பொய் சொல்லி இருக்கிறான் 
புலவன் வள்ளுவ!
எல்லா அம்மாவுக்கும் 
எப்படி ஆறியிருக்கும் 
கொழுந்துகளை கொளுத்திய 
கொள்ளியின் வடு !

அநாதைகளாகிவிட்டது
பெற்றோர்கள் மட்டுமல்ல 
லாலிபாப்புகளும்
பார்பி பொம்மைகளும்தான்!

கடைசியில் கைகாட்டிசென்ற 
கரங்கள் 
கைகாட்டியபடியே...
கருகியிருந்ததுதன் 
கடுஞ்சோகம்!

முன்னிரவில் 
தாலாட்டு கேட்டவர்கள் 
பிற்பகலில் 
ஒப்பாரியாகிவிடார்களே !




அவங்கள் சிலேட்டில் 
எழுதினார்கள் 
'அ' .....'ஆ'.... என்று 
எமன் தன ஏட்டில் 
எழுதிவிட்டான் 
'புவனா' 'சரவணா' என்று.


காவல் நிலையத்தில் 
கடுங்கொள்ளை நடந்தது போல் 
தெய்வங்கள் நிறைந்த 
திருத்தலத்தில் 
'தீ 'ங் கொடுமை நடந்திருச்சே!




வெள்ளிகிழமை தோறும் 
'விரதம்' கேட்கும் தெய்வம் -அந்த 
வெள்ளிகிழமை மட்டும் 
'விபரீதம்' கேட்டதேன்..?

அரசாங்கத்தின் விளம்பரம் நம்பி 
'ஒன்றோடு' நிறுத்திக்கொண்ட....
அதையும் பறிகொடுத்த 
பெற்றோருக்கு பரிகாரம் என்ன ?

கொடுக்கின்ற தெய்வம் 
கூரையை பிரிதித்துதான் கொடுக்கும் 
எரித்துக்கொடுத்ததென்றால் 
அது....
வரமல்ல. சாபம் !

கடைசியில் 
அஸ்தி கரைந்தது 
கங்கையில்லல்ல 
ஓராயிரம் கண்ணீரிலும் -இந்த 
ஒற்றை கவிதையிலும் தான்.

****     ****     ****     ****     **** 


2 comments:

  1. Really heart touching lines bro...

    அந்த தீக்கு தெரியவில்லை...

    தன் கொள்ளி வாயால் அள்ளித் திண்பது..

    உச்சி வெயிலே உணர்த்தப்படாத....

    ஊமத்தம்பூக்களை என்று..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவுக்கு நன்றி

      Delete