Monday, 31 July 2023

Groceries

 


Order Groceries Online 👇👇👇

கவிதைக்காடு! - வதூத்: ஹைக்கூ

கவிதைக்காடு! - வதூத்: ஹைக்கூ: 

 தாழ்பாள் இல்லாத  குளியலறை  உன் சரி செய்யப்படாத  தாவணி.      *** *** *** *** வேர்வரை நனைக்காத  மழை என்ன மழை ? உயிர் தொட்டு கசியாத  காதல்...

சோதனை சாலையில் 
நூதனக் குழந்தை 
சாதனை நூற்றாண்டு!

லிக்னைட் எடுக்க 
வயலில் குழிபறிப்பு 
புதைத்து விவசாயம் !

அசைந்து அசைந்து 
செல்கிறது 
பினத்தின் நிழல் !




Monday, 24 March 2014

கவிதைக்காடு! - வதூத்: நேரிசை வெண்பாக்கள்

கவிதைக்காடு! - வதூத்: நேரிசை வெண்பாக்கள்: இயற்ச்சீர்   வரவெண்சீர் வெண்டளையோ(டு) வெண்பா பயிற்சி அளியென் தமிழே - முயற்சி திருவினை ஆக்கி சிறுவனை போற்றிப் பெரும்புலவ(ன்) ஆக்க...

நேரிசை வெண்பாக்கள்


இயற்ச்சீர்  வரவெண்சீர் வெண்டளையோ(டு) வெண்பா
பயிற்சி அளியென் தமிழே - முயற்சி
திருவினை ஆக்கி சிறுவனை போற்றிப்
பெரும்புலவ(ன்) ஆக்கி விடு!

ஆயகலை கள்மறந்தாய் அல்பகல் நெட்டெனும்
மாயவலை சிக்கி மதிகெட்டாய் – நீயாடா
வையமே உய்ய வரம்வாங்கி வந்தவன்?
தெய்வமே கண்டுசொல் தீர்வு!

அந்திவர பூக்குமல்லி தானோ இவளோயென்
அந்தமாதி உய்யும் உயிர்தானோ – எந்ததிசை
 நாடாளு(ம்) ராணியும் பன்னாட்டு பெண்டிரு(ம்)
 ஈடாமோ உன்னழ குக்கு

மெல்லமாய் கண்திறந்து மோகம் நெருப்பிட
செல்லமாய் கிள்ளும் சிறுமலரே - சொல்லாயோ
எப்போது உன்னை தருவாய் மலர்மஞ்சம்
இப்போது காண்போம் இணைந்து!

பாவாடை பைங்கிளியே பால்மொழியே இன்சுகமாய்
பூவாடை வீசும் சுவைக்கனியே – பூவேயென்
நாவாடப் வந்த நறுங்கவியே நான்தேடும்
ஏவாளே என்னைநீ சேர்

பூவிதழின் மேலுறங்கும் வெண்பனி போல்நானுன்
பூவிதழில் மீதுறங்க வேணுமடி - நாவினில்
சக்கரை தேயும் அதுபோலென் ஆவியில்
இக்கணம் தோய்ந்து விடு!














 - வதூத் 

Friday, 4 November 2011

காதல் 2

பூட்டப்பட்ட வீட்டின் 
திறக்கபடாத தபால் பெட்டியில்  கிடக்கும் 
ஒற்றை பூவாய் 
பயனற்று கிடக்கிறது 
எனக்கு வெளிப்படுத்தாத 
உன் காதல் 

Thursday, 3 November 2011

துன்பகோணம்!

                              - வதூத் 

( கடந்த 2004 ஆம் வருடம் ஜூலை 16 தேதி நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கும்பகோணம் தீ விபத்தில் பலியான பச்சிளம் குழந்தைகளின் நினைவு நாளில் எழுதப்பட்ட ஒரு கறுப்புக்கவிதை )



"தீயினாற் சுட்ட புண் 
உள்ளாறும்"...
பொய் சொல்லி இருக்கிறான் 
புலவன் வள்ளுவ!
எல்லா அம்மாவுக்கும் 
எப்படி ஆறியிருக்கும் 
கொழுந்துகளை கொளுத்திய 
கொள்ளியின் வடு !

அநாதைகளாகிவிட்டது
பெற்றோர்கள் மட்டுமல்ல 
லாலிபாப்புகளும்
பார்பி பொம்மைகளும்தான்!

கடைசியில் கைகாட்டிசென்ற 
கரங்கள் 
கைகாட்டியபடியே...
கருகியிருந்ததுதன் 
கடுஞ்சோகம்!

முன்னிரவில் 
தாலாட்டு கேட்டவர்கள் 
பிற்பகலில் 
ஒப்பாரியாகிவிடார்களே !




அவங்கள் சிலேட்டில் 
எழுதினார்கள் 
'அ' .....'ஆ'.... என்று 
எமன் தன ஏட்டில் 
எழுதிவிட்டான் 
'புவனா' 'சரவணா' என்று.


காவல் நிலையத்தில் 
கடுங்கொள்ளை நடந்தது போல் 
தெய்வங்கள் நிறைந்த 
திருத்தலத்தில் 
'தீ 'ங் கொடுமை நடந்திருச்சே!




வெள்ளிகிழமை தோறும் 
'விரதம்' கேட்கும் தெய்வம் -அந்த 
வெள்ளிகிழமை மட்டும் 
'விபரீதம்' கேட்டதேன்..?

அரசாங்கத்தின் விளம்பரம் நம்பி 
'ஒன்றோடு' நிறுத்திக்கொண்ட....
அதையும் பறிகொடுத்த 
பெற்றோருக்கு பரிகாரம் என்ன ?

கொடுக்கின்ற தெய்வம் 
கூரையை பிரிதித்துதான் கொடுக்கும் 
எரித்துக்கொடுத்ததென்றால் 
அது....
வரமல்ல. சாபம் !

கடைசியில் 
அஸ்தி கரைந்தது 
கங்கையில்லல்ல 
ஓராயிரம் கண்ணீரிலும் -இந்த 
ஒற்றை கவிதையிலும் தான்.

****     ****     ****     ****     **** 


Wednesday, 2 November 2011

மது vs மாது

                              -வதூத்


உன்னை படைக்கும் போது 
பிரம்மன்
மது அருந்தியிருப்பான்  போல 
உன் அழகின் போதையில் 
என் இளமை தள்ளாடுகிறது.

காதல் 
சோமபானத்தையும்
சுரபானத்தையும்
உன் இதழில் காய்ச்சுகிறது.

மது 
நாட்டுக்கும் வீட்டுக்கும் 
கேடு !
காதலுக்கு நன்று!




நீயும் நானும் பருகத்தான் 
பூமிக்கோப்பையில்
காதல் மதுவை 
வழிய வழிய 
ஊற்றியிருக்கிறான்
இறைவன்.

ஒன்று இரண்டாய் தெரியும் 
மது அருந்தினால் 
நீயும் நானும் 
ஒன்றாய் தெரிகிறோம் 
காதல் அருந்தியதால் 

உயிர் தொட்டுச்சொல் 
மயக்கம் தருவது 
மதுவா? 'அது'வா?

***   ***   ***   ***   ***