-வதூத்
உன்னை படைக்கும் போது
பிரம்மன்
மது அருந்தியிருப்பான் போல
உன் அழகின் போதையில்
என் இளமை தள்ளாடுகிறது.
காதல்
சோமபானத்தையும்
சுரபானத்தையும்
உன் இதழில் காய்ச்சுகிறது.
மது
நாட்டுக்கும் வீட்டுக்கும்
கேடு !
நீயும் நானும் பருகத்தான்
பூமிக்கோப்பையில்
காதல் மதுவை
வழிய வழிய
ஊற்றியிருக்கிறான்
இறைவன்.
ஒன்று இரண்டாய் தெரியும்
மது அருந்தினால்
நீயும் நானும்
ஒன்றாய் தெரிகிறோம்
காதல் அருந்தியதால்
உயிர் தொட்டுச்சொல்
மயக்கம் தருவது
மதுவா? 'அது'வா?
*** *** *** *** ***

No comments:
Post a Comment