- வதூத்
( கடந்த 2004 ஆம் வருடம் ஜூலை 16 தேதி நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கும்பகோணம் தீ விபத்தில் பலியான பச்சிளம் குழந்தைகளின் நினைவு நாளில் எழுதப்பட்ட ஒரு கறுப்புக்கவிதை )
"தீயினாற் சுட்ட புண்
உள்ளாறும்"...
பொய் சொல்லி இருக்கிறான்
புலவன் வள்ளுவ!
எல்லா அம்மாவுக்கும்
எப்படி ஆறியிருக்கும்
கொழுந்துகளை கொளுத்திய
கொள்ளியின் வடு !
அநாதைகளாகிவிட்டது
பெற்றோர்கள் மட்டுமல்ல
லாலிபாப்புகளும்
பார்பி பொம்மைகளும்தான்!
கடைசியில் கைகாட்டிசென்ற
கரங்கள்
கைகாட்டியபடியே...
கருகியிருந்ததுதன்
கடுஞ்சோகம்!
முன்னிரவில்
தாலாட்டு கேட்டவர்கள்
பிற்பகலில்
ஒப்பாரியாகிவிடார்களே !
அவங்கள் சிலேட்டில்
எழுதினார்கள்
'அ' .....'ஆ'.... என்று
எமன் தன ஏட்டில்
எழுதிவிட்டான்
'புவனா' 'சரவணா' என்று.
காவல் நிலையத்தில்
கடுங்கொள்ளை நடந்தது போல்
தெய்வங்கள் நிறைந்த
திருத்தலத்தில்
'தீ 'ங் கொடுமை நடந்திருச்சே!
வெள்ளிகிழமை தோறும்
'விரதம்' கேட்கும் தெய்வம் -அந்த
வெள்ளிகிழமை மட்டும்
'விபரீதம்' கேட்டதேன்..?
அரசாங்கத்தின் விளம்பரம் நம்பி
'ஒன்றோடு' நிறுத்திக்கொண்ட....
அதையும் பறிகொடுத்த
பெற்றோருக்கு பரிகாரம் என்ன ?
கொடுக்கின்ற தெய்வம்
கூரையை பிரிதித்துதான் கொடுக்கும்
எரித்துக்கொடுத்ததென்றால்
அது....
வரமல்ல. சாபம் !
கடைசியில்
அஸ்தி கரைந்தது
கங்கையில்லல்ல
ஓராயிரம் கண்ணீரிலும் -இந்த
ஒற்றை கவிதையிலும் தான்.
**** **** **** **** ****



Really heart touching lines bro...
ReplyDeleteஅந்த தீக்கு தெரியவில்லை...
தன் கொள்ளி வாயால் அள்ளித் திண்பது..
உச்சி வெயிலே உணர்த்தப்படாத....
ஊமத்தம்பூக்களை என்று..
உங்கள் பதிவுக்கு நன்றி
Delete