Friday, 4 November 2011

காதல் 2

பூட்டப்பட்ட வீட்டின் 
திறக்கபடாத தபால் பெட்டியில்  கிடக்கும் 
ஒற்றை பூவாய் 
பயனற்று கிடக்கிறது 
எனக்கு வெளிப்படுத்தாத 
உன் காதல் 

Thursday, 3 November 2011

துன்பகோணம்!

                              - வதூத் 

( கடந்த 2004 ஆம் வருடம் ஜூலை 16 தேதி நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கும்பகோணம் தீ விபத்தில் பலியான பச்சிளம் குழந்தைகளின் நினைவு நாளில் எழுதப்பட்ட ஒரு கறுப்புக்கவிதை )



"தீயினாற் சுட்ட புண் 
உள்ளாறும்"...
பொய் சொல்லி இருக்கிறான் 
புலவன் வள்ளுவ!
எல்லா அம்மாவுக்கும் 
எப்படி ஆறியிருக்கும் 
கொழுந்துகளை கொளுத்திய 
கொள்ளியின் வடு !

அநாதைகளாகிவிட்டது
பெற்றோர்கள் மட்டுமல்ல 
லாலிபாப்புகளும்
பார்பி பொம்மைகளும்தான்!

கடைசியில் கைகாட்டிசென்ற 
கரங்கள் 
கைகாட்டியபடியே...
கருகியிருந்ததுதன் 
கடுஞ்சோகம்!

முன்னிரவில் 
தாலாட்டு கேட்டவர்கள் 
பிற்பகலில் 
ஒப்பாரியாகிவிடார்களே !




அவங்கள் சிலேட்டில் 
எழுதினார்கள் 
'அ' .....'ஆ'.... என்று 
எமன் தன ஏட்டில் 
எழுதிவிட்டான் 
'புவனா' 'சரவணா' என்று.


காவல் நிலையத்தில் 
கடுங்கொள்ளை நடந்தது போல் 
தெய்வங்கள் நிறைந்த 
திருத்தலத்தில் 
'தீ 'ங் கொடுமை நடந்திருச்சே!




வெள்ளிகிழமை தோறும் 
'விரதம்' கேட்கும் தெய்வம் -அந்த 
வெள்ளிகிழமை மட்டும் 
'விபரீதம்' கேட்டதேன்..?

அரசாங்கத்தின் விளம்பரம் நம்பி 
'ஒன்றோடு' நிறுத்திக்கொண்ட....
அதையும் பறிகொடுத்த 
பெற்றோருக்கு பரிகாரம் என்ன ?

கொடுக்கின்ற தெய்வம் 
கூரையை பிரிதித்துதான் கொடுக்கும் 
எரித்துக்கொடுத்ததென்றால் 
அது....
வரமல்ல. சாபம் !

கடைசியில் 
அஸ்தி கரைந்தது 
கங்கையில்லல்ல 
ஓராயிரம் கண்ணீரிலும் -இந்த 
ஒற்றை கவிதையிலும் தான்.

****     ****     ****     ****     **** 


Wednesday, 2 November 2011

மது vs மாது

                              -வதூத்


உன்னை படைக்கும் போது 
பிரம்மன்
மது அருந்தியிருப்பான்  போல 
உன் அழகின் போதையில் 
என் இளமை தள்ளாடுகிறது.

காதல் 
சோமபானத்தையும்
சுரபானத்தையும்
உன் இதழில் காய்ச்சுகிறது.

மது 
நாட்டுக்கும் வீட்டுக்கும் 
கேடு !
காதலுக்கு நன்று!




நீயும் நானும் பருகத்தான் 
பூமிக்கோப்பையில்
காதல் மதுவை 
வழிய வழிய 
ஊற்றியிருக்கிறான்
இறைவன்.

ஒன்று இரண்டாய் தெரியும் 
மது அருந்தினால் 
நீயும் நானும் 
ஒன்றாய் தெரிகிறோம் 
காதல் அருந்தியதால் 

உயிர் தொட்டுச்சொல் 
மயக்கம் தருவது 
மதுவா? 'அது'வா?

***   ***   ***   ***   ***

Sunday, 30 October 2011

மழை

                  -வதூத் 

ஆனந்த சிறை 
மழைக்கம்பி 
எண்ணுகிறேன்.



மழை ஒரு தீக்குச்சி 
அது 
காதல் கவிதைகளை 
கொளுத்திப்போடுகிறது.

மழை சில ஆபாச கவிதைகளை 
எழுதிவிடுகின்றது 
உன்னை நனைத்து.




மழை 
மேலிருந்து கீழாய் அல்ல 
பாக்கவாட்டில் பொழிகின்றது 
உன்னை பார்க்கும் போது.

மழை!
காதல்.
நீ !
என் ஜலதோஷம்.


ஹைக்கூ


தாழ்பாள் இல்லாத 
குளியலறை 
உன் சரி செய்யப்படாத 
தாவணி.

     *** *** *** ***

வேர்வரை நனைக்காத 
மழை என்ன மழை ?
உயிர் தொட்டு கசியாத 
காதல் என்ன காதல் ?

*** *** ****** ****

அசைந்து அசைந்து 
செல்கிறது 
பிணத்தின் நிழல் !

*** *** *** *** *** 

சோதனை சாலையில் 
நூதனக் குழந்தை 
சாதனை நூற்றாண்டு !
 
*** *** *** *** *** 


                            -வதூத்                        


Saturday, 29 October 2011

ஹைக்கூ

           
                             
மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் 
மேலே போய்கொண்டிருகிறது 
உயிர் .....!?

******************

யாருக்கு பிச்சையிடுவது ?
ஒரே குழப்பம்.
கடவுள் வரைந்த 
தெரு ஓவியன் !

********************

மரக்கிளையில் நேராக 
நிற்கும் வௌவால்கள் 
போதையில் தலைகீழாய் 
நான்.... !?

***********************


கிழக்கு ஈசானியில் 
அடுப்பு  வைத்தால் 
ஏற்றுகொள்வானாம் இந்திரன்.
பொங்கல் குறிபுரைதார்
பெரியார் வழிவந்த 
பெட்டிக்கடை தாத்தா!

***********************

திறக்கபடாத காட்டின் 
பரிக்கபடாத பூ 
காதல் !

இயற்றபடாத லிபியின் 
முடிவிலி கவிதை 
நீ !
                                       -வதூத் 
*************************

மல்லிகை !

              - வதூத் 

கடவுள் சுண்டி விட்ட 
காதல் நாணயத்தில் 
'பூ'வாய் விழுந்தாய்
என் தலையில் !
               

காதல்

                - வதூத்

கண்களை விற்று சித்திரம் வாங்கும் 
கதையிங்கு கண்டேன் நானே - கண்டவை 
கதையல்ல உண்மை பெண்ணே 
காதலும் அதுபோல தானே.

****     ****     ****    ****  

காணக்கிடைக்காத ஒன்று 
கையில் கிடைத்தாக வேண்டும் 
காதல் அதுவாக வந்து 
கண்ணை திறந்தாக வேண்டும் 

****     ****    ****    ****