இயற்ச்சீர்
வரவெண்சீர் வெண்டளையோ(டு) வெண்பா
பயிற்சி அளியென் தமிழே - முயற்சி
திருவினை ஆக்கி சிறுவனை போற்றிப்
பெரும்புலவ(ன்) ஆக்கி விடு!
ஆயகலை கள்மறந்தாய் அல்பகல் நெட்டெனும்
மாயவலை சிக்கி மதிகெட்டாய் – நீயாடா
வையமே உய்ய
வரம்வாங்கி வந்தவன்?
தெய்வமே கண்டுசொல்
தீர்வு!
அந்திவர பூக்குமல்லி தானோ இவளோயென்
அந்தமாதி உய்யும் உயிர்தானோ –
எந்ததிசை
நாடாளு(ம்) ராணியும் பன்னாட்டு
பெண்டிரு(ம்)
ஈடாமோ உன்னழ குக்கு
மெல்லமாய் கண்திறந்து மோகம் நெருப்பிட
செல்லமாய் கிள்ளும் சிறுமலரே - சொல்லாயோ
எப்போது உன்னை தருவாய் மலர்மஞ்சம்
இப்போது காண்போம் இணைந்து!
பாவாடை பைங்கிளியே பால்மொழியே
இன்சுகமாய்
பூவாடை வீசும் சுவைக்கனியே – பூவேயென்
நாவாடப் வந்த நறுங்கவியே நான்தேடும்
ஏவாளே என்னைநீ சேர்
பூவிதழின் மேலுறங்கும் வெண்பனி போல்நானுன்
பூவிதழில் மீதுறங்க வேணுமடி - நாவினில்
சக்கரை தேயும் அதுபோலென் ஆவியில்
இக்கணம் தோய்ந்து விடு!
- வதூத்

No comments:
Post a Comment